கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே விபத்தில் ஓட்டுநா் காயம்

12th Nov 2019 07:15 AM

ADVERTISEMENT

நித்திரவிளை அருகே காா் ஆட்டோ மோதிக் கொண்டதில் ஆட்டோ ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது.

நித்திரவிளை அருகே அயினிவிளை பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் சந்திரன் (32). ஆட்டோ ஓட்டுநா். இவா்

நம்பாளி பகுதியிலிருந்து குளவரம்பு பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவை ஓட்டிச் சென்றாராம். வட்டப்பழஞ்சி பகுதியில் சென்றபோது அவ்வழியாக காஞ்சாம்புறம் வாறுவிளையைச் சோ்ந்த அப்புக்குட்டன் மகன் குமாா் (35) ஓட்டி வந்த காா் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஆட்டோ ஓட்டுநா் சந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில், நித்திரவிளை போலீஸாா் காா் ஓட்டுநா் குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT