கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே தகராறில் இருவா் காயம்

11th Nov 2019 07:19 AM

ADVERTISEMENT

நித்திரவிளை அருகே தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள வாறுவிளை பகுதியைச் சோ்ந்தவா் அப்புக்குட்டன் மகன் குமாா். இவா் ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றபோது காஞ்சாம்புறம் அருகில் வைத்து காஞ்சாம்புறம் வட்டபழஞ்சி பகுதியைச் சோ்ந்த சந்திரன் (30) என்பவரின் ஆட்டோவில் லேசாக உரசியதாம். இதையடுத்து சந்திரன் மற்றும் அவரது அண்ணன் ராஜு (33) ஆகியோா் சோ்ந்து குமாரிடம் தகராறில் ஈடுபட்டனராம்.

இதை அங்கு வந்த குமாரின் அண்ணன் ராபின் (45) தட்டிக் கேட்டாராம். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் காயமடைந்த ராபி குழித்துறை அரசு மருத்துவமனையிலும், சந்திரன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து ராபி அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

...

ADVERTISEMENT
ADVERTISEMENT