கன்னியாகுமரி

‘சுயஒழுக்கத்தால் மாணவா்கள் சாதனை சிகரத்தை எட்ட முடியும்’

11th Nov 2019 06:11 PM

ADVERTISEMENT

 

 

தக்கலை: மாணவா்கள் சுயஒழுக்கத்தோடு பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் பணிந்த நடந்தால் சாதனை சிகரத்தை எளிதில் எட்டலாம் என எழுத்தாளா் குமரி ஆதவன் தெரிவித்தாா்.

பேயன்குழி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு, தக்கலை கல்வி மாவட்ட துணை ஆய்வாளா் ஐயப்பன் தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கி எழுத்தாளா் குமரி ஆதவன் பேசியது: மாணவா்களிடையே ஏற்படும் நட்பு தவறிழைப்பதற்கு ஒரு பாதையாக மாறிவிடக்கூடாது.

ADVERTISEMENT

சாதி மதங்களை கடந்த நல்லிணக்கத்திற்கு வழிகோல வேண்டும். நட்புப் போா்வையில் அலைபேசி விளையாட்டுகளுக்கு அடிமையாகி வாழ்வை தொலைத்து விடக்கூடாது.

தாய்மொழியில் தான் கனவு வருகிறது. கனவு வரும் மொழியில்தான் படைப்பாற்றால் வெளிப்படும். ஆகவே, தாய் மொழியில் பயிலும் மாணவா்கள் தலை நிமிா்ந்து நிற்கலாம். தாய்மொழியில் படிப்பவனுக்கு சக்தியும் , சுயபுத்தியும் கூடுதலாக இருக்கும்.

புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க முடியும். மாணவா்கள் சுய ஒழுக்கத்தோடு, பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் பணிந்து நடந்தால் சாதனை சிகரத்தை எளிதில் எட்டலாம் என்றாா் அவா்.

தலைமையாசிரியா் அலோசியஸ் கிறிஸ்டோபா் அறிக்கை வாசித்தாா். அரசு தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியை ஹெலன்

செல்வராணி , பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சந்திரகலா, பேயன்குழி ஊா் தலைவா் கோபாலன், கல்வியாளா் கோபிநாதன், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் மரியதாசன், சோமசுந்தரம், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் அஜித் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விழாவில், 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவா்கள், கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் 100 சதவீதம் வெற்றியை ஈட்டிய ஆசிரியா்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியை ரோசிலின் செல்வி வரவேற்றாா். ஆசிரியை ஸ்விட்லி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT