கன்னியாகுமரி

சாமிதோப்பில் நிலவேம்புக் குடிநீா் அளிப்பு

11th Nov 2019 07:20 AM

ADVERTISEMENT

சாமிதோப்பு அன்புவனத்தில் பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகள், பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் அதிகாரிகள், தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாமிதோப்பு அன்புவனத்தில் பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை பாலபிரஜாபதி அடிகளாா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT