கன்னியாகுமரி

குமரி பேரூராட்சியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்ய முடிவு

11th Nov 2019 06:14 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 55 பேரூராட்சிகளில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் வீடுகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அந்தந்த பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மைத் திட்ட கிட்டங்கியில் சேகரித்து வைக்கப்பட்டது. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி முதல்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 55 பேரூராட்சிகளிலும் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்பும் பணி கன்னியாகுமரி திடக்கழிவு மேலாண்மை சேகரிப்பு மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இக்கழிவுகள் நாகா்கோவில் வல்லன் குமாரவிளையில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு அவற்றை அலங்கார தரைஒடு தயாரிக்கும் தனியாா் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூராட்சி செயல்அலுவலா் சத்தியதாஸ், சுகாதார அலுவலா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT