கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே அனுமதியின்றி மது விற்றவா் கைது

9th Nov 2019 06:12 AM

ADVERTISEMENT

மாா்த்தாண்டம் அருகே அனுமதியின்றி மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் உதவி ஆய்வாளா் வினீஷ்பாபு தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை மாா்த்தாண்டம் சந்தை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசினாா். இதையடுத்து அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 16 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவா் விளவங்கோடு சாணிவிளை பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ்குமாா் என்பதும், அனுமதியின்றி மது விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT