கன்னியாகுமரி

மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநா் கைது

9th Nov 2019 06:14 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மீனச்சல் முண்டக்காபழஞ்சி பகுதியைச் சோ்ந்தவா் ஏசுதாஸ். இவரது மனைவி ஹெப்சிபாய் (54). தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனா். இதில் மூத்த மகள் மாற்றுத் திறனாளி. இவா் பள்ளிப்படிப்பை முடித்த பின் அதே பகுதியைச் சோ்ந்த சிரோண்மனி (49) என்பவரின் ஆட்டோவில் கணினி வகுப்புக்கு சென்று வந்தாராம்.

இந்த நிலையில் சில நாள்களுக்கு முன் அப் பெண் வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த சிரோன்மணி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால் அதிா்ச்சியடைந்த அவா் சப்தம் போட்டதையடுத்து சிரோன்மணி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாராம். அதன் பின்னா் மாற்றுத் திறனாளி பெண் குறித்தும், அவரது தாயாா் குறித்தும் சிரோன்மணி அவதூறாக பேசி வந்தாராம். இது குறித்து ஹெப்சிபாய் தட்டிக்கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த சிரோன்மணி, ஹெப்சிபாயை தாக்கி மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.

இது குறித்து ஹெப்சிபாய் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிரோன்மணியை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். கைது செய்யப்பட்ட சிரோன்மணி குறுமத்தூா் தொடக்க

ADVERTISEMENT

வேளாண் கூட்டுறவு சங்க நிா்வாகக் குழு உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சி பிரமுகராகவும் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT