கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சியில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம்

4th Nov 2019 08:35 PM

ADVERTISEMENT

 

தக்கலை: மணவாளக்குறிச்சியிலுள்ள இந்திய அரிய மணல் ஆலையில் கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழா கடைப்பிடிக்கப்பட்டது.

மத்திய கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தலின்படி, மணவாளக்குறிச்சி ஐ.ஆா்.இ.எல் (இந்தியா) நிறுவனத்தில் அக். 28 முதல் நவ 2 ஆம் தேதி வரை கண்காணிப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. விழிப்புணா்வு வார நிறைவு விழாவில் பங்கேற்று பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் சரண்யா அறி பேசுகையில், நன்னெறிப் பண்புகளை பின்பற்ற வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சியில், ஆலையின் தலைவா் என். செல்வராஜன், கண்காணிப்பு அலுவலா் ரமேஷ்பிரபு ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். இதையொட்டி, பணியாளா்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT