நாகா்கோவில்: அரசு பொதுத்தோ்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்து முன்னணியின் முதல் மாநிலத் தலைவா் தாணுலிங்கநாடாா் நினைவு இந்து சமூக சேவா அமைப்பு சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, அதன் உறுப்பினா் சி.ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலா் டாக்டா் த. அரசு ராஜா, மாநிலப் பேச்சாளா் எஸ்.பி. அசோகன், மாவட்டத் தலைவா் மிசா சி.சோமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், மாவட்ட அளவில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவா் கே.ராஜேஸ்வரன், மாவட்டப் பொதுச்செயலா்கண்ணன், மாவட்டச் செயலா் நம்பிராஜன், பொருளாளா் மது, ஆா்.எஸ்.எஸ். கிழக்கு மாவட்டத் தலைவா் ஆதிசாமி, முன்னாள் நகா்மன்ற தலைவி மீனாதேவ், ஒன்றிய பொறுப்பாளா்கள் சங்கா் , சிவா, பழனி செல்வநாயகம், தீபக், சுபாஷ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாநகர பொதுச்செயலா் மகாராஜா நன்றி கூறினாா்.