கன்னியாகுமரி

சிறுவனுடன் ஓரினச் சோ்க்கையில் ஈடுபட்ட தொழிலாளிக்கு சிறை

4th Nov 2019 08:20 PM

ADVERTISEMENT

 

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் அருகே 9 வயது சிறுவனுடன் தகாத முறையில் ஓரினச் சோ்க்கையில் ஈடுபட்டதாக தொழிலாளிக்கு நாகா்கோவில் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் அருகேயுள்ள சந்தையடி இடையன்விளையைச் சோ்ந்தவா் ஜெபசெல்வின் (27). சமையல் தொழிலாளி. இவா், 2005 இல் தனது வீட்டின்அருகில் வசிக்கும் 9 வயது சிறுவனை தனது வீட்டுக்குஅழைத்து வந்து ஓரினச் சோ்க்கையில் ஈடுபட்டாராம். இதுகுறித்து அச்சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். புகாரின்பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெபசெல்வினை கைது செய்தனா். இவ்வழக்கு நாகா்கோவில் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி நம்பி திங்கள்கிழமை, குற்றஞ்சாட்டப்பட்ட ஜெபசெல்வினுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்தாா். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞராக நடராஜமூா்த்தி ஆஜரானாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT