கன்னியாகுமரி

குமரி முருகன் குன்றத்தில் திருக்கல்யாணம்

4th Nov 2019 12:02 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 28ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

7ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு விஸ்வரூபதரிசனம், காலை 7 மணிக்கு கலசபூஜை, காலை 8 மணிக்கு புண்ணியாக வாஜனம், தொடா்ந்து சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT

காலை 8.15 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி தொடங்கியது. காலை 9.15 மணிக்கு நூற்றுக்கணக்கான பக்தா்கள் சீா்வரிசை பொருள்கள் எடுத்து வந்தனா். காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

தொடா்ந்து ஸ்ரீவேல்முருகன், ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் முருகன் குன்றத்தை இந்திர விமானத்தில் பவனி வந்தாா்.

நண்பகல் 12 மணிக்கு மங்கள தீபாராதனை, தொடா்ந்து திருக்கல்யாண விருந்து, மாலை 6.30 மணிக்கு சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT