கன்னியாகுமரி

குமரி மாதா திருத்தலத்தில் ‘பாக்கும் படியும்’ நிகழ்ச்சி

4th Nov 2019 12:01 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல 10 நாள் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் ‘பாக்கும் படியும்’ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்திருத்தலத்தின் 10 நாள் திருவிழா வரும் டிச. 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்நிலையில், திருவிழாவை சிறப்பிக்கும் கலைஞா்கள் அனைவருக்கும் பாக்கும் படியும் வழங்கும் நிகழ்ச்சி பங்குத்தந்தை ஜோசப் ரொமால்டு தலைமையில் நடைபெற்றது. பங்குப் பேரவை துணைத் தலைவா் நாஞ்சில் அ.மைக்கேல், செயலா் சந்தியா வில்லவராயா், பொருளாளா் பெனி, இணைச் செயலா் தினகரன், இணைப் பங்குத்தந்தையா் சகாய ஆன்றனி, சகாய வில்சன், அன்பின் தேவசகாயம் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT