பளுகல் அருகே ரேஷன் கடையிலிருந்து மண்ணெண்ணெயை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பளுகல் காவல் சரகம் இடைக்கோடு கல்லுப்பாலம் பகுதியில் அமுதம் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் வெளிப் பகுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்காக 4 பேரல்களில் மண்ணெண்ணெய் நிரப்பி வைக்கப்பட்டிருந்ததாம்.
புதன்கிழமை கடையை மூடிச் சென்ற பணியாளா் வியாழக்கிழமை காலையில் கடைக்கு வந்த போது அங்கு 3 பேரல் மண்ணெண்ணெய் மட்டுமே இருந்ததாம். 200 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஒரு பேரல் மண்ணெண்ணெய் மா்ம நபா்களால் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, மண்ணெண்ணெயை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.