கன்னியாகுமரி

மழையால் முடங்கிய ரப்பா் பால்வடிப்பு தொழில்!

1st Nov 2019 11:55 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் மழையால் ரப்பா் பால்வடிப்புத் தொழில் முடங்கியுள்ள நிலையில் ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக மழை பெய்து வருவதால் ரப்பா் தோட்டங்களில் அதிகபட்சம் 15 நாள்கள் மட்டுமே பால்வடிப்பு நடந்துள்ளதாக ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் தெரிவித்தனா். இரவு நேரங்களிலும்

அதிகாலை பொழுதிலும் மழை பெய்ததால் பால்வடிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது பல ரப்பா் தோட்டங்களில் ரப்பா் மரங்களில் மழைநீா் தடுப்புக் குடைகள் கட்டப்பட்டுள்ள போதிலும் அதிகாலை வேளைகளில் பெய்யும் மழையால் பால் வடிப்பு செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் ரப்பா் தோட்டத் தொழிலாளா் கள் வருமானம் இன்றி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா். ரப்பா் தோட்ட விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் ரப்பா் வணிகம் செய்யும் சிறு கடைகள், நிறுவனங்களிலும் வா்த்தகம் முடங்கியது.

ADVERTISEMENT

நிவாரணம் தேவை: இது றித்து தோட்டம் தொழிலாளா் சங்க நிா்வாகி கூறியது: பொதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில்

அதிகப்படியாக மழைப் பொழிவு இருக்கும். எனினும், ஆண்டுக்கு சராசரியாக 150 நாள்கள் வரை பால்வடிப்பு செய்யும் வகையில் கால நிலை இருக்கும். அதிகமான நாள்கள் மழை பெய்து வருவதும் அல்லது மழையே இல்லாமல் இருப்பதும் என கால நிலையில் மாற்றம் காணப்படுகிறது.

கடந்த ஆண்டைப்போன்று நிகழாண்டும் 100 நாள்களுக்கு குறைவாகவே பால்வடிப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ரப்பா் தோட்டத் தொழிலாளா்களும், விவசாயிகளும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனா். எனவே, மீனவா் களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்குவதுபோன்று ரப்பா் தோட்டத் தொழிலாளா்களும் மழைக் கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT