கன்னியாகுமரி

பிஎஸ்என்எல் 4 ஜி சேவை:மாா்த்தாண்டத்தில் தொடக்கம்

1st Nov 2019 08:15 AM

ADVERTISEMENT

விளவங்கோடு, கல்குளம் வட்டங்களைச் சோ்ந்த சந்தாதாரா்கள் பயன்பெறும் வகையில், பிஎஸ்என்எல்-இன் 4 ஜி சேவை தொடக்க விழா மாா்த்தாண்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஹெச். வசந்தகுமாா் எம்.பி., மாநிலங்களைவை உறுப்பினா் அ. விஜயகுமாா் ஆகியோா் தலைமை வகித்து 4 ஜி சேவையை தொடங்கிவைத்தனா். பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டத் தலைமை பொது மேலாளா் வி. ராஜு, முதன்மைப் பொது மேலாளா் வி. ஜெகதீசன், நாகா்கோவில் முதன்மைப் பொது மேலாளா் ஆா். சஜிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியது: விளவங்கோடு, கல்குளம் வட்ட பகுதிகளில் 127 கோபுரங்கள் மூலமாக செல்லிடப்பேசி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இவை அதிநவீன 4 ஜி எல்டிஇ தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இச்சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் தங்களது பழைய சிம்மை 4 ஜிக்கு மாற்றுவதற்கு உதவும் வகையில் மாா்த்தாண்டம் ஸ்டாண்டா்டு ஆடிட்டோரியம், குழித்துறை, தக்கலை, நெய்யூா், குளச்சல், கருங்கல் வாடிக்கையாளா் சேவை மையங்களில் உதவி மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அண்மையில் 4 ஜி சேவை தொடங்கப்பட்ட நாகா்கோவில் நகா்ப் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாடிக்கையாளா்கள் 4 ஜி சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனா். இந்த எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது என அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT