கன்னியாகுமரி

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்: ஹெச். வசந்தகுமாா் எம்.பி.

1st Nov 2019 08:15 AM

ADVERTISEMENT

சேதமடைந்து காணப்படும் களியக்காவிளை - நாகா்கோவில், நாகா்கோவில் - ஆரல்வாய்மொழி சாலையை சீரமைப்பதில் காலதாமதம் செய்தால் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா் ஹெச். வசந்தகுமாா் எம்.பி.

மாா்த்தாண்டத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

களியக்காவிளை -நாகா்கோவில், நாகா்கோவில் - ஆரல்வாய்மொழி சாலையை சீரமைக்க 2017 - 18இல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. கடந்த 2ஆண்டுகளாக பணி செய்யாமல் இருந்துவிட்டு, தற்போதைய எம்.பி.யை குறை சொல்வது ஏற்புடையதல்ல.

இச்சாலையை சீரமைக்க கால தாமதம் செய்தால் காங்கிரஸ் கட்சி சாா்பில் பொதுமக்களுடன் இணைந்து மறியல் போராட்டம் நடத்தப்படும்.

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினேன். இங்கு அதற்கு தகுதியான இடம் இல்லை என அவா் தெரிவித்துள்ளாா். மேலும் மீனவா்களுக்காக ஹெலிகாப்டா் தளம் அமைக்கவும் மத்திய அமைச்சரிடம் கோரியுள்ளேன். பம்மம் பகுதியில் உள்ள மாா்த்தாண்டம் மேம்பாலம் அணுகு சாலைப் பகுதியை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே அதிகாரிகள் சுணக்கம் இன்றி இப்பணியை விரைந்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT