கன்னியாகுமரி

இந்திராகாந்தி நினைவு தினம்

1st Nov 2019 08:17 AM

ADVERTISEMENT

மாா்த்தாண்டம் பகுதியில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 35ஆவது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், மாா்த்தாண்டம் அருகே கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் தம்பி விஜயகுமாா், ஜோதிஸ்குமாா், மாவட்ட நிா்வாகிகள் பிபின், சாமுவேல் ஜாா்ஜ், கிங்ஸ்லி முல்லா், பாலு, மாசிலாமணி, அசோகன், சுஜித் டேனியல், லூயிசாள், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவா் ஸ்டூவா்ட், மாவட்ட மனித உரிமை பிரிவு தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மாநில மகிளா காங்கிரஸ் செயலா் லைலா ரவிசங்கா், மாவட்ட சிறுபான்மை பிரிவுத் தலைவா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

குலசேகரத்தில்...

குலசேகரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் இந்திரா காந்தியின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில், குலசேகரம் சந்தை சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் காஸ்டன் கிளிட்டஸ் தலைமை வகித்தாா்.

இதில், மாவட்டச் செயலா் ஜே. மோகன்தாஸ், ஜேம்ஸ்ராஜ், கமருதீன், செல்வராஜ், ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT