நாகர்கோவிலில் நகை பறிப்பு வழக்கு: இளைஞருக்கு ஒன்றரை ஆண்டு சிறை

நாகர்கோவில் பகுதியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்தது தொடர்பான வழக்கில், இளைஞருக்கு

நாகர்கோவில் பகுதியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்தது தொடர்பான வழக்கில், இளைஞருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
நாகர்கோவிலை அடுத்த சுசீந்திரம், செட்டித் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி உமா (50).  இவர், கடந்த 9.12.2017இல்   பால் வாங்குவதற்காக வீட்டின் முன் நின்றிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிபின் (21), ஷபிக் (20) ஆகியோர் உமாவிடம் முகவரி கேட்பதுபோல் நடித்துள்ளனர். மேலும்,  உமா கழுத்தில் அணிந்திருந்த  நான்கரை பவுன்  தங்கச் சங்கிலியை சிபின்  பறித்தாராம். பின்னர், இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனராம். 
இதுகுறித்து சுசீந்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்றம் எண் 3இல்  நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி  கிறிஸ்டியன்,  குற்றம்சாட்டப்பட்ட சிபினுக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ஷபிக்கை விடுவித்தும் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com