கன்னியாகுமரி

அரசுப் பள்ளிக்கு இலவச தொலைக்காட்சி

31st Jul 2019 07:14 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு அரசுப் பள்ளியில் சீர் மிகு வகுப்பறைக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டது.
திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996-98 ஆம் ஆண்டு வரை மேல்நிலைப்பிரிவில் பயின்ற மாணவர், மாணவி கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், இப்பள்ளியில் புதிதாக தொடங்கப்படும் சீர்மிகு வகுப்பறைக்கு ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டி முன்னாள் மாணவர்கள் சார்பில் வழங்கினர். 
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை பெறும் வகையில் பல்வேறு உதவிகள் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT