கன்னியாகுமரி

ரப்பர் ஷீட்டுகள் திருட்டு

29th Jul 2019 06:52 AM

ADVERTISEMENT

குலசேகரம் அருகே ரப்பர் ஷீட்டுகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
குலசேகரம் அருகேயுள்ள வீரப்புலியைச் சேர்ந்தவர் ஜெகன் (37). இவர், தற்போது  நாகர்கோவிலில் தங்கியுள்ளார். ஊரில் உள்ள வீட்டில் அவரது பெற்றோர் உள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை மாலை இவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் அருகே உள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த, சுமார் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான 200 ரப்பர் ஷீட்டுகள் காணாமல் போயிருந்தது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT