கன்னியாகுமரி

முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை வழங்க மார்க்சிஸ்ட்  வலியுறுத்தல்

29th Jul 2019 06:54 AM

ADVERTISEMENT

ஆதரவற்ற முதியோர், விதவைகள், புற்று நோயாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைத்து வந்த உதவித்தொகையை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்ட அறிக்கை: ஆதரவற்ற முதியோர், விதவைகள், புற்று நோயாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைத்து வந்த உதவித் தொகை சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு கிடைத்து வந்த சிறு உதவியையும் இழந்து தவித்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவித்தொகை மீண்டும் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT