கன்னியாகுமரி

குழித்துறை ஆற்றுப் பாலத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

29th Jul 2019 06:48 AM

ADVERTISEMENT

குழித்துறை தாமிரவருணி ஆற்றுப் பாலத்தின் கைப்பிடி சுவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
குழித்துறை தாமிரவருணி ஆற்றுப் பாலத்தின் கைப்பிடிச் சுவரில் ஏறி, ஆற்றினுள் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சப்தமிட்டுக் கொண்டிருந்தார்.
அப்பகுதி வழியாக சென்ற சிலர் இதைக் கவனித்து, குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனராம். இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் வந்து, தற்கொலைக்கு முயன்ற இளைஞரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து அந்த நபரிடம் களியக்காவிளை போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர் களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகண்டன் என்பதும், அவர் நீண்ட காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT