புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் தனியார் மருத்துவமனையில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.
கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த பொன்னையன் மனைவி ரபேக்காள்(59). இவர் உடல்நலக்குறைவால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், வியாழக்கிழமை மருந்துவமனை வளாகத்தில் ரபேக்காள் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த மர்மநபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டாராம். இது குறித்து, புகாரின் பேரில் புதுக்கடை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.