மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவட்டாறு பகுதியில் வெள்ளிக்கிழமை பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
நிகழ்ச்சிக்கு, வட்டாரச் செயலர் ஆர். வில்சன், தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அண்ணாதுரை, திருவட்டாறு கிளை நிர்வாகிகள் எட்வின் ராஜ், புஷ்பராஜ், லால் உள்பட பலர் பங்கேற்றனர்.