கன்னியாகுமரி

மார்த்தாண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு

22nd Jul 2019 07:24 AM

ADVERTISEMENT

மார்த்தாண்டம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவரை தீயணைப்புப் படை வீரர்கள் மீட்டனர்.
மார்த்தாண்டம் அருகே ஆலுவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லசுவாமி (74). இவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டருகேயுள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து குளிக்க தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அவர் கிணற்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது நீண்ட நேரத்துக்குப் பின் தெரியவந்தது.
இதையடுத்து, குழித்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சந்திரன் தலைமையில் தீயணைப்புப் படை வீரர்கள் வந்து செல்லசுவாமியை மீட்டனர். அவருக்கு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT