தெற்கு ராமசாமிபுரம் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயிலில் பிரதிஷ்டை கும்பாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் மேலநடுவக்குறிச்சியில் இருந்து விநாயகர் ஊர்வலம், இதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அன்னதானம், மதியம் கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெற்றன. மாலையில் 608 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இப்பூஜைக்கு நடுவக்குறிச்சி சிவகணேசன் தலைமை வகித்தார். மாவட்ட பாஜக துணைத் தலைவர் செல்வராஜ், கோட்ட இந்து முன்னணி செயலர் சக்திவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவிளக்கு பூஜையை அடுத்து, சிறப்பு பூஜைகளும், இரவில் அன்னதானம், கும்பம், கரகாட்டம் ஆகியனவும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சித்திரைவேல் தலைமையில் பொதுமக்கள் செய்திருந்தனர்.