நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞர் காயமடைந்தார்.
நித்திரவிளை அருகேயுள்ள தூத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் மகன் நிஷாந்த் (33). இவர் சனிக்கிழமை இரவு நித்திரவிளையிலிருந்து சின்னத்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, சின்னத்துறை பாலம் பகுதியில் பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிஷாந்தை, அப்பகுதியினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து நித்திரவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.