தக்கலை பேருந்து நிலையத்தில், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த இந்த கண்காட்சியில், கால்நடைத் துறை மூலம் விவசாயிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள், நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், சமூக நலத் துறையின் மூலமாக பட்டதாரி அல்லாதவர்களுக்கு திருமணத்திற்கு நிதியுதவியாக ரூ.25 ஆயிரமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.50 ஆயிரமும், தாலிக்கு தங்கமும் வழங்கப்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.