கன்னியாகுமரி

நாயர் சங்க செயற்குழு கூட்டம்

12th Jul 2019 06:48 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரியில் நாயர் சங்க செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
சங்கத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். செயலர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், சங்க வளர்ச்சிக்காக ரூ. 20 ஆயிரம் வழங்கிய ராமசந்திரன் நாயருக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள் வேலாயுதன், கிருஷ்ணன், ராமகிருஷ்ணன், மோகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுதர்சன நாயர் வரவேற்றார். பொருளாளர் தாமோதரன் நாயர் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT