கன்னியாகுமரி

குளச்சலில்  கலையரங்கம் கட்டும் பணி தொடக்கம்

12th Jul 2019 06:47 AM

ADVERTISEMENT

குளச்சல் லியோன் நகரில் புதிய கலையரங்கம் கட்டும் பணி தொடங்கிவைக்கப்பட்டது. 
குளச்சல் பேரவைத் தொகுதி உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ், குளச்சல் லியோன் நகரில் கலையரங்கம் கட்டுவதற்காக, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு செய்தார். 
இதையடுத்து நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு, பங்குத்தந்தை மரிய செல்வன் தலைமை வகித்தார். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு இயக்குநர் ஸ்டீபன் ஜெபம் செய்தார். எம்.எல்.ஏ. ஜே.ஜி. பிரின்ஸ், கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
புனித காணிக்கை அன்னை ஆலய செயலர் வால்டர், ரீத்தாபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் மேரி ஸ்டெல்லா, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலர் ஜான்சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT