கன்னியாகுமரி

குஞ்சன்விளை அத்திக்கடையில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றம்

12th Jul 2019 06:44 AM

ADVERTISEMENT

நாகர்கோவில் அருகே குஞ்சன்விளை பகுதியில் அத்திக்கடை கால்வாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை பொதுப்பணித் துறையினர் வியாழக்கிழமை அகற்றினர். 
அத்திக்கடை கால்வாய்க் கரையோரம் பொதுப்பணித் துறை நிலத்தை ஆக்கிரமித்து தனியார் ஒருவர் வீடு கட்டியிருந்தார். அதை அகற்றுமாறு அவருக்கு பொதுப்பணித் துறையினர் நோட்டீஸ் அளித்தனர். ஆனால், அவர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதுதொடர்பாக பொதுப்பணித் துறையினர் ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
இந்நிலையில், ஆட்சியரின் உத்தரவின் பேரில் வியாழக்கிழமை காலை, சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஜெகன், செல்வராஜ், போலீஸ் பாதுகாப்புடன் அந்த ஆக்கிரமிப்பு வீடு அகற்றப்பட்டது. இதில், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் ரமேஷ் ராஜன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அனில்குமார், வருவாய் ஆய்வாளர் பாஞ்சாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT