கன்னியாகுமரி

உருவபொம்மை எரிப்பு: காங்கிரஸார் மீது வழக்கு

12th Jul 2019 06:45 AM

ADVERTISEMENT

திங்கள்நகரில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் உருவபொம்மையை எரித்ததாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 23 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி  குறித்து சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, திங்கள்நகர் பிலாக்கோடு சந்திப்பில், குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில்,  சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்து கோஷங்களை எழுப்பிய காங்கிரஸ் நிர்வாகிகள்,  அவரது உருவபொம்மையை திடீரென எரித்தனர். இதுதொடர்பாக, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் லாரன்ஸ் உள்ளிட்ட 23 பேர் மீது இரணியல் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT