கன்னியாகுமரி

போக்குவரத்து விதிமுறை மீறல்:  களியக்காவிளை, கொல்லங்கோட்டில் 10 வாகனங்கள் பறிமுதல்

4th Jul 2019 06:35 AM

ADVERTISEMENT

களியக்காவிளை, கொல்லங்கோடு பகுதிகளில் விதிமுறை மீறி இயக்கப்பட்ட  10 வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து  அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தலைமையிலான அதிகாரிகள் களியக்காவிளை, மார்த்தாண்டம், புதுக்கடை, கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகனத் தணிக்கை செய்தனர். இதில், தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 3 மினிலாரிகள், விதிமுறை மீறய கேரள பதிவெண் கொண்ட வேன் உள்பட 2  வேன்கள், வரி செலுத்தப்படாததால் 2 பொக்லைன் இயந்திரங்கள், அதிக பாரம் ஏற்றிச் சென்ற 3 மினிலாரிகள் என 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் 2 வேன்கள் கொல்லங்கோடு காவல் நிலையத்திலும், பிற வாகனங்கள் மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுபோல், வாகனச் சோதனை தொடரும் என்றும், விதிமுறை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT