கன்னியாகுமரி

உள்ளாட்சித் தேர்தல்: தக்கலையில் அமமுக ஆலோசனைக் கூட்டம்

2nd Jul 2019 06:25 AM

ADVERTISEMENT

தக்கலை வடக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலர் லிபோரியஸ் தலைமை வகித்தார்.  அவைத் தலைவர் சங்கரன்குட்டி முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில், கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலர் ஜெங்கின்ஸ் பங்கேற்றுப் பேசினார்.
மாவட்ட மருத்துவரணிச் செயலர் டாக்டர் மாதேசன்,  மாவட்ட வழக்குரைஞரணிச் செயலர் சௌந்தர், ஜெயலலிதா பேரவைச் செயலர் விஜயசந்திரன்,  இலக்கிய அணி இணைச்செயலர் எபினேசர், மாவட்ட மகளிரணிச் செயலர் பிரபா,  தொழில்நுட்பப் பிரிவு  மாவட்டச் செயலர் ராஜாஜோயல்,  பத்மநாபபுரம் நகரச் செயலர் சாதிக்,  வழக்குரைஞர்  சதீஷ்குமார்,  அகஸ்டீன் ததேயூஸ்,  டிக்றோஸ்,  கண்ணன், நிர்வாகிகள் பங்கேற்றனர். 
தீர்மானங்கள்:  உள்ளாட்சித் தேர்தலில்  மாவட்ட ஊராட்சி உறுப்பினர்,  ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பேரூராட்சி  மற்றும் ஊராட்சித் தலைவர்கள்,  வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு  கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது; கட்சியின் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரனின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் தீவிரமாக கட்சி பணியாற்றுவது; கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்; கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களான மணல், ஜல்லி தட்டுப்பாடு இல்லாமல் குறைந்த விலையில் கிடைக்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தக்கலை பகுதியிலுள்ள நீர் நிலைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; விவசாயம், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT