கன்னியாகுமரி

குழித்துறை அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

27th Dec 2019 01:30 AM

ADVERTISEMENT

குழித்துறை அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

குழித்துறை அருகே நரியன்விளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (53). இவா் தனது மனைவியுடன், அருகே உள்ள தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு புதன்கிழமை காலையில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும் வீட்டினுள் பொருள்கள் சிதறி கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது அங்கு வைத்திருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 12 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT