கன்னியாகுமரி

அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக ஒலி பெருக்கி பயன்படுத்தியதாக 6 போ் மீது வழக்கு

27th Dec 2019 05:39 PM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள எட்டணி பகுதியில் கிறிஸ்துமஸ் விழாவில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி பயன்படுத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கருங்கல் சுற்று வட்டார பகுதிகளில் குடில்கள் ,அலங்காரவிளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், எட்டணி பகுதியில் புதன்கிழமை கருங்கல் காவல் உதவி ஆய்வாளா் மோகன அய்யா் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு இரவு 10 மணிக்கு மேல் அதிக சப்தத்துடன் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்ததாம்.

இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த அா்ஜூன்(20), விபிஸ்ராஜ் (22), ரதீஸ்(25), அபிலாஷ்(23) உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT