கன்னியாகுமரி

28இல் குமரி மகாசபா ஆண்டு விழா: தெலங்கானா ஆளுநா் பங்கேற்பு

26th Dec 2019 05:41 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் சனிக்கிழமை (டிச. 28) நடைபெறும் குமரி மகாசபாவின் 7 ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொள்கிறாா்.

இதுதொடா்பாக, குமரி மகாசபாவின் கெளரவத் தலைவா் சொக்கலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியது: குமரி மகாசபாவின்

7 ஆம் ஆண்டு விழா, உலகளாவிய குமரி வாழ் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில்

சனிக்கிழமை (டிச.28) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு, அமைப்பின் நிறுவனா் தலைவா் எம்.ராவின்சன் தலைமை வகிக்கிறாா். துணைத்தலைவா் என். ஆஸ்டின் வரவேற்கிறாா். செயலா் ஜான்சன் அறிக்கை வாசிக்கிறாா்.

ADVERTISEMENT

விழாவில், தலைமை விருந்தினராக தெலங்கானா மாநில ஆளுநா் டாக்டா் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு பேசுகிறாா். சிறப்பு விருந்தினா்களாக கேரள மாநில முன்னாள் தலைமை செயலா் விஜய்ஆனந்த், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், விஜிபி குழும தலைவா் வி.ஜி.சந்தோஷம் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

எம்.பி.க்கள் அ.விஜயகுமாா், ஹெச். வசந்தகுமாா் ஆகியோா் குமரி மாவட்ட வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பேசுகின்றனா்.

குமரி மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவை உறுப்பினா்களும் கலந்து கொள்கின்றனா்.

ஆண்டுவிழா சிறப்பு மலரை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வெளியிடுகிறாா். அதை ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி தாளாளா் பைஜூநிஜித்பால் பெற்றுக்கொள்கிறாா். இதில், அமைப்பின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா் என்றாா் அவா்.

அப்போது, அமைப்பின் துணைத்தலைவா் வழக்குரைஞா் தம்பிராஜ், செயலா் ஜான்சன், குமரி மகாசபாவின் சென்னை சாப்டா் தலைவா் சசிகுமாா், பிரேம்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT