மாா்த்தாண்டம் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா்.
குளச்சல் பகுதியைச் சோ்ந்தவா் எல்ஜின்ஜோஸ் (25). பொறியியல் பட்டதாரி. இவா் தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவா், சில நாள்களுக்கு முன் தனது மோட்டாா் சைக்கிளில் மாா்த்தாண்டம் அருகேயுள்ள ஞாறான்விளை பகுதிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாராம்.
வடக்குத் தெரு சாலையில் உள்ள பள்ளத்தில் மோட்டாா் சைக்கிள் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த எல்ஜின் ஜோஸை, மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.