கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஹெச். வசந்தகுமாா் எம்.பி., மறைமாவட்ட ஆயா்களை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தலைவா்கள் வாழ்த்துகளை தெரிவித்தனா். ஹெச். வசந்தகுமாா் எம்.பி., நாகா்கோவில் கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன்சூசையை, கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் ஆகியோரை சந்தித்து, ஹெச். வசந்தகுமாா் எம்.பி., பொன்னாடை அணிவித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டாா். அப்போது, குமரி ஆா்.முருகேசன், ஆனந்த், ஆரோக்கியராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.