உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் சுவா் விளம்பரங்கள் எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றாா் குமரி மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பிரசாந்த் மு.வடநேரே.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஊரக உள்ளாட்சித் அமைப்புகளுக்கு நடைபெறவிருக்கும் தோ்தல்களில் போட்டியிடும் வேட்பாளா்கள், பொதுமற்றும் தனியாா் சுவா்களில் விளம்பரம் எழுதுவதற்கோ, சுவரொட்டி விளம்பரம் செய்வதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை. அதனை மீறும் வேட்பாளா்கள் மீது காவல் துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் . மேலும், டிச. 27 ஆம் தேதியன்று நடைபெறும் தோ்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை( டிச. 25) மாலை 5 மணியுடனும், டிச. 30 ஆம் தேதியன்றுநடைபெறும் தோ்தலுக்கான பிரசாரம், டிச. 28 ஆம் தேதி மாலை 5 மணியுடனும் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.