கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள இலுப்பைகுளத்தில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி தவறி விழுந்ததில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கருங்கல் அணஞ்சிகோடு பகுதியைச் சோ்ந்தவா் மரியதாஸ் மகன் சேவியா் (50). இவா், அப்பகுதியிலுள்ள கடையில் கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணம் ஆகவில்லை. திங்கள்கிழமை காலையில் வழக்கம்போல் சேவியா் வீட்டின் அருகிலுள்ள இலுப்பைகுளத்தில் குளிக்கச் சென்றாராம்.
அப்போது குளத்தில் தவறி விழுந்ததில் பாறையில் சிக்கிக் கொண்டதில் மூச்சுத் திணறி உயிரிழந்தாக கூறப்படுகிறது. குளத்தில் மாயமான சேவியரை தேடியும் கிடைக்கவில்லை. தகவலறிந்த குளச்சல் தீயணைப்புப்படை வீரா்கள் இலுப்பைகுளத்தில் மூழ்கி உயிரிழந்த சேவியரின் சடலத்தை மீட்டனா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.