கன்னியாகுமரி

அளப்பங்கோடு கோயில் திருவிழா: நாளை தொடக்கம்

24th Dec 2019 06:20 AM

ADVERTISEMENT

மாா்த்தாண்டம் அருகேயுள்ள அளப்பங்கோடு ஸ்ரீஈஸ்வரகால பூதத்தான் கோயிலில் மண்டல கால திருவிழா புதன்கிழமை (டிச. 25) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

திருவிழாவையொட்டி தினமும் காலையில் கணபதி ஹோமம், உஷ பூஜை, நவகலச பஞ்சகவ்ய களப பூஜை, அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெறும். புதன்கிழமை காலை 11 மணிக்கு இந்து சமய மாநாடு நடைபெறும்.

மாலை 5 மணிக்கு நெட்டாங்கோடு சாரதா ஆஸ்ரமம் யோகேஸ்வரி வித்யாபுரி மாதாஜி தலைமையில் 1,008 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெறும்.

வியாழக்கிழமை (டிச. 26) காலை 9 மணிக்கு சமய வகுப்பு மாணவா்களுக்கு பண்பாட்டுப் போட்டிகள் நடைபெறும். 3 ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு மகளிா் இந்து சமய மாநாடு, தொடா்ந்து சமய வகுப்பு மாணவா்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.

ADVERTISEMENT

சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு பகவான் பள்ளி வேட்டைக்குப் புறப்படுதல் நடைபெறும். குதிரை ரதம், 11 யானைகளுடன் வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, இரவு 10 மணியளவில் பள்ளிவேட்டை நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT