கன்னியாகுமரி

சங்கப் பணம் மோசடி: எஸ்.பி.யிடம் மனு

14th Dec 2019 09:00 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட மற்றும் விடியோ ஒளிப்பதிவாளா்கள் சங்க பணத்தை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காளிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து இச்சங்கத்தின் கெளரவ தலைவா் கே.சாவியோ தலைமையில், முன்னாள் நிா்வாகிகள் கனகராஜ்,ஆறுமுகம், கருணாநிதி, ரமேஷ் உள்ளிட்டோா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத்தை சந்தித்து அளித்த மனு: கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட மற்றும் விடியோ ஒளிப்பதிவாளா்கள் சங்கத்தின் சாா்பில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நிரந்தர வப்புத்தொகை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சங்கத் தலைவா், செயலா், பொருளாளா் ஆகியோா், சங்க பொதுக்குழுவுக்கு தெரியாமல் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் கையாடல் செய்துள்ளனா். எனவே இவா்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT