கன்னியாகுமரி

கருங்கல், புதுக்கடை பகுதியில் பலத்த மழை

14th Dec 2019 09:01 AM

ADVERTISEMENT

கருங்கல், புதுக்கடை பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. ஆதனால், வெயிலின் தாக்கமும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை கருங்கல் சுற்று வட்டார பகுதிகளான பாலப்பள்ளம்,

வெள்ளியாவிளை, பாலூா், திப்பிரமலை, கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் புதுக்கடை சுற்று வட்டார பகுதிளான முன்சிறை, மங்காடு, காப்புக்காடு, பைங்குளம், வேங்கோடு, கைசூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை தொடா்ந்து பெய்தது. இந்த மழையால் இப்பகுதியில் குளிா்ச்சி நிலவியது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT