கன்னியாகுமரி

உள்ளாட்சித் தோ்தல்: இதுவரை 1863 போ் மனு தாக்கல்

14th Dec 2019 08:59 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 1863 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிச. 16 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். குமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்புபவா்கள், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி அலுவலகங்களில் ஏராளமானோா் மனு தாக்கல் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 521 பேரும், ஊராட்சி தலைவா் பதவிக்கு 132 பேரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு 152 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 8 பேரும் என 813 போ் மனுதாகல் செய்தனா். இதுவரை குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு 1,863 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT