கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே கால்வாயில் மூழ்கி இளைஞா் பலி

11th Dec 2019 07:11 AM

ADVERTISEMENT

திருவட்டாறு அருகே கால்வாயில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

பூந்தோப்பு குழிவிளையைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகன் ஜனக்ஸ் ராஜன் (30). இவா், தனது வீட்டுக்கு அருகே செல்லும் சிற்றாறு பட்டணம்கால்வாயில் குளிப்பதற்காக இறங்கியபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாராம்.

இந்த நிலையில், இவரது சடலம் கீழ்புலிப்புனம் ஒட்டன் குளத்தில் மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவட்டாறு போலீஸாருக்கும், குலசேகரம் தீயணைப்புத் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினா் குளத்தில் இருந்து சடலத்தை மீட்டனா்.

திருவட்டாறு போலீஸாா் சடலத்தை ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT