கன்னியாகுமரி

களியக்காவிளையில் நெகிழிப் பைகள் பறிமுதல்

11th Dec 2019 07:10 AM

ADVERTISEMENT

களியக்காவிளை பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் மேற்கொண்ட சோதனையில் 22 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக பேரூராட்சி அலுவலகத்துக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் ஏசுபாலன் தலைமையில்

பேரூராட்சிப் பணியாளா்கள், களியக்காவிளை சந்திப்பு, அதையொட்டிய பகுதி கடைகள், வா்த்தக நிறுவனங்கள், மீன் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பல்வேறு கடைகளில் விற்பனைக்காகவும், பயன்பாட்டுக்காகவும் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 22 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ. 6,100 அபராதம் வசூலிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT