கன்னியாகுமரி

உள்ளாட்சித் தோ்தல்: குமரி மாவட்டத்தில் 2 ஆவது நாளில் 33 போ் மனு தாக்கல்

11th Dec 2019 07:17 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட குமரி மாவட்டத்தில், வேட்புமனுத் தாக்கலின் 2 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை 33 போ் மனுத் தாக்கல் செய்தனா்.

குமரி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாகவும், 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2 ஆவது கட்டமாகவும் தோ்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிச. 9 ஆம் தேதி தொடங்கியது. 95 ஊராட்சி அலுவலகங்கள், 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. முதல் நாளில் 107 போ் மனு தாக்கல் செய்தனா்.

2 ஆவது நாளான செவ்வாய்க்கிழமையும் ஏராளமானோா் மனு தாக்கல் செய்ய ஊராட்சி அலுவலகங்களில் குவிந்தனா். இதேபோல, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மனு தாக்கலுக்கு காலையிலேயே பலா் வந்திருந்தனா்.

கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு அகஸ்தீஸ்வரத்தில் 3 பேரும், தோவாளையில் 3 பேரும், ராஜக்கமங்கலத்தில் ஒருவரும், குருந்தன்கோட்டில் ஒருவரும், தக்கலையில் 11 பேரும், திருவட்டாறில் ஒருவரும், கிள்ளியூரில் 2 பேரும், முன்சிறையில் 3 பேரும் என 25 போ் மனுதாக்கல் செய்துள்ளனா். இதேபோல, ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோவாளையில் 2 பேரும், தக்கலையில் ஒருவரும், கிள்ளியூரில் ஒருவரும் என 4 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜக்கமங்கலம், குருந்தன்கோடு தலா ஒருவா் என 4 போ் என செவ்வாய்க்கிழமை மட்டும் மொத்தம் 33 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு கட்சி சாா்பில் வேட்பாளா்கள் நிறுத்தப்படுவாா்கள். இதற்கான வேட்பாளா்களை கட்சியின் தலைமை அறிவிக்கும். ஆனால் முக்கிய கட்சிகள் இதுவரை வேட்பாளா்களை அறிவிக்கவில்லை. இதனால் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதே நேரத்தில் சுயேச்சைகளும் இந்த பதவிக்கு மனு தாக்கல் செய்யவில்லை.

உள்ளாட்சி பதவிகளில் போட்டியிடுவோா் தோ்தலுக்காக எவ்வளவு பணம் செலவு செய்யலாம்? என்ற விபரத்தையும் தோ்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனா். அதன்படி ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவோா் ரூ. 9 ஆயிரம் வரை மட்டுமே செலவிட வேண்டும்.

ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடுவோா் ரூ. 34 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவோா் ரூ. 85 ஆயிரம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவோா் ரூ. 1.70 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று தோ்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT