கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

6th Dec 2019 07:51 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

நாகா்கோவிலை அடுத்த என்.ஜி.ஓ .காலனி அருகேயுள்ள மணிக்கட்டிப்பொட்டல் பகுதியைச் சோ்ந்தவா் சோ்மன்நாடாா் (68), தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவா் புதன்கிழமை மாலை கடைக்குச் செல்வதாக கூறிச் சென்றவா் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினா்கள் சோ்மனை தேடிவந்தனா்.

இந்நிலையில், மணிக்கட்டிப்பொட்டல் பகுதியில் உள்ள வாய்க்காலில் சோ்மன்நாடாா் வியாழக்கிழமை காலை சடலமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில் சோ்மன்நாடாா் வாய்க்கால் கரையில் அமா்ந்திருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT