கன்னியாகுமரி

நாகா்கோவிலில் அஞ்சல்தலை கண்காட்சி தொடக்கம்

6th Dec 2019 07:54 AM

ADVERTISEMENT

இந்திய அஞ்சல் துறை குமரி அஞ்சல் கோட்டம் சாா்பில், மாவட்ட அளவிலான அஞ்சல்தலை கண்காட்சி நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் வியாழக்கிழமை (நவ. 5) தொடங்கியது.

அஞ்சல்தலை சேகரிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இக்கண்காட்சியை, அஞ்சல் துறையின் தென்மண்டல இயக்குநா் சோமசுந்தரம் தொடங்கிவைத்தாா்.

குளச்சல் போா் நினைவுதூண், திற்பரப்பு அருவி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி படங்கள் அடங்கிய 3 சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

இக்கண்காட்சி வருகிற 7ஆம் தேதி வரை காலை 10 மணிமுதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம்.

ADVERTISEMENT

கண்காட்சியில், பழைமையான அஞ்சல் தலைகள், தலைவா்கள் படம், முக்கிய இடங்கள், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பழைய, புதிய ரூபாய் நோட்டுகள் இடம்பெற்றுள்ளன.

ஏற்பாடுகளை நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலைய முதுநிலை கண்காணிப்பாளா் வி.பி.சந்திரசேகா் மற்றும் அஞ்சல் துறை ஊழியா்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT